நித்தியானந்தா சாமியார் மற்றும் அவர் தொடர்பான செக்ஸ் லீலைகளை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா.
நிஜ சம்பவங்களைப் படமாக்குவதில் கில்லாடி ராம் கோபால் வர்மா. சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகளை கையில் எடுத்துள்ளார் வர்மா.
காட் அன்ட் செக்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்குகிறார் வர்மா. இது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகளையும் உள்ளடக்கியதாக இருக்குமாம்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், ஒரு ஆசிரமத்தின் உள்ளே நடக்கும் ரகசியங்கள் குறித்த படம் இது. இது செக்ஸ் லீலைகளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, உள்ளே நடக்கும் கோஷ்டிப் பூசல்களாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக நடப்போரின் செயல்களை கூறுவதாகவும் இருக்கலாம்.
நித்தியானந்தா விவகாரத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது மனிதனால் கடவுளைக் கூட வெல்ல முடியும், ஆனால் காமத்தை வெல்ல முடியாது என்பதே அது.
நாடு முழுவதும் இதுபோன்ற செக்ஸ் லீலைகளில் சிக்கிய எத்தனையோ சாமியார்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும் மக்கள் தொடர்ந்து சாமியார்களிடம் சென்று கொண்டுதான் உள்ளனர்.
கடவுள் பேச மாட்டார். எனவே மக்கள் கடவுளுக்கு அடுத்து நாடுவது சாமியார்களைத்தான். ஒரு சாமியார் தன்னை பக்தர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படிச் செய்தால்தான் தன்னை ஒரு சாமியார் என்று பக்தன் நம்புவான் என நினைக்கிறார் சாமியார்.
ஆனால் அதேசமயம், சாமியார்களும் கூட சாதாரண மனிதர்கள்தான். எனவே அவர்களையும் செக்ஸ் ஆசை தொட்டுச் செல்கிறது. அதுதான் நித்தியானந்தா விவகாரத்திலும் நடந்த்து.
எனவே கடவுளுக்கும், காமத்துக்கும் இடையிலான இந்த வித்தியாசங்களை வைத்து கதை பண்ணியுள்ளேன்.
என்.டி.திவாரி முதல், நித்தியானந்தா வரை, எஸ்.பி.எஸ். ரத்தோர் வரை காமத்திற்கு அடிமையாகாத யாரையுமே பார்க்க முடியாது. செக்ஸுக்கு இரையானவர்கள் இவர்கள். எனவே கடவுளை வென்றாலும் கூட உங்களால் காமத்தை வெல்ல முடியாது.
எனது படத்திற்கு நித்தியானந்தாவின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா அல்லது இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் எது நடந்தாலும் அது எனது படத்திற்கான நல்ல விளம்பரமாக அமையும்.
நித்தியானந்தா வீடியோவை நான் பார்த்தபோது அவரின் செக்ஸ் லீலைகள் என்னைக் கவரவில்லை. மாறாக அந்த நேரத்திலும் கூட கன்னட சினிமாப் பாடல்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாரே, அதுதான் என்னைக் கவர்ந்த்து.
நான்கு சுவர்களுக்குள் அவர் ஒரு மிகச் சாதாரண மனிதர். அந்த விஷயம்தான் என்னை கவர்ந்தது, இந்தப் படத்தை எடுக்கவும் யோசனையைத் தந்தது.
வெளியில் இவர்கள் பல கோடிகளை சந்திக்கிறார்கள். ஆனால் எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்பதை யாரும் கவனிப்பதே இல்லை. ஆனால் அவர்களது செக்ஸ் வாழ்க்கை குறித்துதான் அனைவரும் ஆவலுடன் படிக்கிறார்கள்.
எனது படத்தின் நாயகன் ரோலுக்கு யாரையும் நான் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றார் வர்மா.
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!
அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!
தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!
http://balaphotoblog.blogspot.com/
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment