காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன்: கோவை அம்மன்குளத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் புதைந்து கொண்டே போகின்றன. அந்த இடத்தில் வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யும் முன், அந்த இடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? மண் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?
டவுட் தனபாலு: வீடு கட்டப்பட்ட இடத்தின் பெயரே அம்மன், 'குளம்'ம்னு இருக்கும்போது, ஆய்வுக்கு அவசியமே இல்லையே... குளத்தில வீடு கட்டினா, புதையாம இருக்குமா...? நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் அரசே முன்மாதிரியா இருப்பதைத் தான், இந்த விவகாரமும் வெளிப்படுத்தியிருக்கு!
நன்றி தின மலர்
கோவை : கோவையில் மண்ணில் புதைந்து வரும் கட்டடம் பற்றி நேற்று நடத்திய ஆய்வில், அஸ்திவாரத்துக்கு அடியில் உள்ள மண்ணில் மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கட்டடம் புதைவதன் மர்மம் விலகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கட்டடத்தை முழுமையாக இடித்து விட்டு, இதே வளாகத்தில் வேறு புதிய குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளக்கரையோரங்களில் குடியிருந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் நோக்கத்துடன், கோவை அம்மன்குளத்தில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்ட நிதியை பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.பெரும்பகுதி பணி முடிந்தநிலையில், மொத்தம் உள்ள 16 கட்டடங்களில் ஒரு கட்டடம் மட்டும் மண்ணில் புதைய துவங்கியது. சிறுகச்சிறுக, சாய்ந்த கட்டடம் 56 செ.மீ., வரை சாய்ந்திருந்த போது, பின்புறம் இரும்புக் குழாய்களால் முட்டுக் கொடுத்து, சாய்வதை பொறியாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment