Thursday, April 8, 2010

Mr.BEAN

image012.jpgimage002.jpgimage001.jpg

--

சுட்டும்  விழிச்சுடர் தான்,  கண்ணம்மா!  
சூரிய   சந்திரரோ?  
வட்டக்  கரியவிழி -   கண்ணம்மா!
வானக்  கருமைகொல்லோ ?
பட்டுக்  கருநீலப் - புடவை  
பதித்த  நல் வயிரம்
நட்டநடு  நிசியில் -  தெரியும்
நட்சத் திரங்களடீ!

சோலை  மலர் ஒளியோ -  உனது  
சுந்தரப்  புன்னகைதான்?
நீலக்  கடலலையே -  உனது  
நெஞ்சின்  அலைகளடீ!

கோலக்  குயிலோசை - உனது  
குரல்  இனிமை யடீ!
 
வாலைக்  குமரியடீ -  கண்ணம்மா
மருவக்  காதல்  கொண்டேன்!

சாத்திரம்  பேசுகிறாய் -  கண்ணம்மா!
சாத்திரம்ஏதுக்கடி?
ஆத்திரம்  கொண்டவர்க்கே -  கண்ணம்மா!  
சாத்திரம்  உண்டோடீ?
மூத்தவர்  சம்மதியில் -  வதுவை  
முறைகள்  பின்பு  செய்வோம்
காத்திருப்  பேனோடீ ? இதுபார்  
கன்னத்து  முத்தம்  ஒன்று!!

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment