Wednesday, April 7, 2010

செய்தி -- பிசியோதெரபிஸ்ட்களுக்கு தனி அமைப்பு உருவாக்க கோரிக்கை



Physiotherapists seek separate body
 
நெல்லை: பிசியோதெரப்பிஸ்டுகள் எனப்படும் இயன்முறை மருத்துவர்களுக்கும் பிற மருத்துவர்களுக்கு இருப்பது போல தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென நெல்லை [^]யில் நடந்த செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டையில் இயன்முறை மருத்துவர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பென்னி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் டெனியல் ராஜசுந்தரம், தலைமை வகித்தார். 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட இயன்முறை மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

பிற மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கு தனி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் பதிவு செய்பவர்கள் சமூகத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். 

இதுபோல் பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கும் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். பிசியோதெரபிஸ்ட் டாக்டர் என போடக்கூடாது என பேட்டியளிப்பதோ, அவதூறு செய்திகளை பரப்புவதோ சட்டப்படி குற்றமாகும். 

எந்த அலோபதி மருத்துவர்களுக்கும், எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கும் பெயருக்கு முன்னால் டாக்டர் என முன்குறிப்பு கொடுத்து பட்டம் வழங்குவதில்லை. 

சட்டரீதியாக அலோபதி முடித்தவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என போட்டுக் கொள்ள கூடாது. 

சட்டரீதியாக பிஎச்டி படித்தவர்கள் மட்டுமே பெயருக்கு முன்னால் டாக்டர் என போட்டுக் கொள்ள முடியும். எனவே எந்த மருத்துவ முறையை சார்ந்தவர்களும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்களின் தரத்தை குறைப்பது போல் அறிக்கை வெளியிட கூடாது என்பது உள்பட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

நன்றி: http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/0407-physiotherapists-seek-separate-body.html



--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment