வழியெங்கும் இறைந்து கிடக்கின்றன பூக்களின் மௌனம்
மௌனமா மரணமா தெரியவில்லை.
பூக்களுக்கு மயக்கம் கூடாது
வாசனைகளின் இயக்கம் பூக்களாலானது!
ஆம்பல் அனிச்சம் ரோஜா மல்லிகை செங்காந்தள்
சிலர் மிதிப்பர் சிலர் பூஜிப்பர்
சிலர் கவிதைகளாக்குவர்
நான் மௌனிக்கிறேன்
எனக்கொருமுறை பைத்தியம் பிடித்திருந்த போது
பூக்களே வைத்தியம் பார்த்தன.
தன் வரலாறு கூறி என்னை உயிர்ப்பித்தன
பிரபஞ்சம் ஒளியாலானது என்பர்
சிலர் இழைகளாலானது என்பர்
அவ்வளவும் பூக்களாயிருந்தால் எத்தனை ரம்யமாயிருக்கும்
பூக்கள் என் பிரஜைகள்
அதனாலேயே நான் கடவுளுமானேன்.
பின்பு காரணமில்லாமல் நான் பூக்களை ஒதுக்கியபோது
என் ஸ்னேகிதத்தை துண்டித்து
என்னை உடைத்துப் போட்டன பூக்கள்.
இனி விமோட்சனமில்லை
நான் பூக்களின் பைத்தியமானேன்!
நன்றி:-http://athmavinulagam.blogspot.com/
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!
- கோலம் போடத் தெரியாதாமே
உனக்கு..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
காலிலே கோலம் போட
கற்று தந்ததோ காதல்.
- உன் பட்டப்பெயர்
ஆல் இந்தியா ரேடியோவாமே!!
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
உன்னை
ஊமையாக்கியதோ உன் நாணம்.
- மருதாணி போட்டால் கூட
சிவக்காத கைகளாமே உனக்கு.
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
வெட்கத்தில்
சிவந்ததோ உன் கன்னம்
- வெளியுலகம் அறியாதவளாமே
நீ..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
எப்படி அறிந்தாய்
என் உள் இதயம்.
- இன்று ஒரு நாள்
காதலர் தினமாமே!!
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
உறுதிப் படுத்திக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!
மிச்சம் வைக்கிறாய்.
- என் கண்ணும் உன் விழியும்
ஒன்றாய் நோக்கும் போது
கயல்விழி மூடிடாமல்
இமைத்துடிப்பை மிச்சம் வைக்கிறாய்.
- தினம் உனைப் பார்த்தப் போதும்
முதல் முறை நோக்கும் போது
தலைக் கவிழ்ந்து நீயும்
நாணத்தை மிச்சம் வைக்கிறாய்.
- நாம் ஊடல் கொள்ளும்
போதெல்லாம்
பேசாமல் மௌனமாய்
வார்த்தைகளை மிச்சம் வைக்கிறாய்.
- உன் இதழ் பதித்து
நானிட்ட முத்தங்களில்
என் இதழோரம் கொஞ்சம்
உன் எச்சிலை மிச்சம் வைக்கிறாய்.
- என் இடைவரை படர்ந்திட்ட
உன் விரல்களை
இன்னும் கொஞ்சம் இறக்கிடாமல்
அங்கேயும் மிச்சம் வைக்கிறாய்.
- இறுக உன் கைப்பற்றி
அருகில் நான் நடக்கும் போதும்
யாரும் பார்த்திடப் போறாங்கன்னு
இடைவெளியை கொஞ்சம் மிச்சம் வைக்கிறாய்.
- உன் அன்பிலும்,அரவணைப்பிலும்
கள்ளம் கபடமில்லா காதலிலும்
மட்டும்-நீ மிச்சம் வைப்பதே இல்லை
உன்னை…
நன்றி :-http://blog.padaipali.com/?cat=3
--
அன்பே கடவுள்
சதீஷ்
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment