சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி வரும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. சுமார் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கின.
கடந்த 2001க்கு பின்னர் 2011ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது நாடுமுழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
வழக்கமாக கேட்கப்படும் குடும்ப உறுப்பினர்கள் விவரம், வயது, படிப்பு, வருமானம், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை தவிர தற்போது செல்போன், கம்ப்யூட்டர் உள்ளதா என்பது போன்ற 35 விவரங்கள் வீடுவீடாக கணக்கெடுப்பட உள்ளது.
வீடுகள் மட்டுமல்லாது கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் போன்ற நிறுவனம் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக்கப்படும்.
கணக்கெடுப்பில் ஈடுபடும் சுமார் ஒன்றரை லட்சம் களப்பணியாளர்களுக்கு சென்னையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பயிற்சி அளிக்கப்படும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு துணை இயக்குனர் வெங்கடேசன் கூறினார்.
அரவாணிகளை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கோரிக்கை பிரிசீலிக்கப்பட்டு, மாற்றம் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
அனைத்து மாநிலங்களிலும் இதுபோல கணக்கெடுப்பு அடுத்த ஆண்டில் முடிக்கப்பட்டு, 2011 பிப்ரவரி மாதம் முதன்மை கணக்கெடுப்பு நடைபெறும். இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் 2011 சென்சஸ் விவரங்கள் இறுதிசெய்யப்படும்.
நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/04/06/census-operations-set-begin-on-june.html
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!
அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!
தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!
http://balaphotoblog.blogspot.com/
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment