இந்திய கடலோர காவற்படை எதற்காக?
தமிழ்நாட்டின் மீனவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும், தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் எவரும் எழுப்பும் வினா இயல்பே.
1983ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக் கரை வரையிலுள்ள மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது - அவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறிலங்க கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன், இரால்களை பறித்துச் செல்வதும், அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதும் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வினா எழுவது இயல்பே.
மேற்கே குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையும், அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம் வரை நீண்டுள்ள கிழக்கு கடற்கரையும் சேர்த்து மொத்தம் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியை திறமையாக கண்காணிக்க 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவற் படை (Indian Coast Guard - ICG).
இந்தியாவின் கடல் எல்லை என்பது 14 கடல் மைல்களோடு (Territorial Waters) முடிந்துவிடவில்லை. இன்று அது இந்திய கடற்கரையிலிருந்து 300 கி.மீ. தூரம் வரையிலான தனித்த பொருளாதார மண்டலாக (Exclusive Economic Zone) விரிவடைந்துள்ளது. இவ்வளவு விரிவான கடல் பகுதியை காக்கும் வல்லமையுடைய படையாகத்தான் இந்திய கடலோர காவற்படை உள்ளது.
உதாரணத்திற்குக் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பைக் காக்க 3 கடலோர காவற்படை கப்பல்களும், இந்திய கடற்படையில் ஒரு பெரும் கப்பலும் ஈடுபட்டுள்ளதாக 2005ஆம் ஆண்டு சென்னையை ஒட்டிய கடற்பரப்பில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் கடலோர காவற்படை பயிற்சி செய்து காட்டியபோது அதன் இயக்குனராக இருந்த வைஸ் அட்மிரல் அருண் குமார் சிங் கூறினார். அது மட்டுமல்ல, 4 டார்னியர் விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் பால்க் நீரிணைப் பகுதியை கண்காணிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது என்றார். இவ்வளவு பலம் வாய்ந்த படை தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை காப்பதற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்றால், இதனைத் தாண்டி எப்படி சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று நாங்கள் வினா எழுப்பியபோது அவர் மழுப்பலாகவே பதில் கூறினார்.
பிறகு தனிமையில் என்னோடு பேசியபோது - ஆஃப் த ரெக்கார்ட் என்று கூறிவிட்டு - தமிழக மீனவர்களை தாக்குவது விடுதலைப் புலிகள்தான் என்று கூறினார். அப்படியானால் அதனை ஏன் வெளிப்படையாக கூறவில்லை என்று கேட்டேன். "இல்லை... இல்லை... அது குறித்து விசாரிக்கிறோம்" என்று கூறி மழுப்பினார்.

Muthamizh
Chennai
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment