கலைஞரின் பொற்கால ஆட்சியில்(!) மூன்றாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை…….
கலைஞர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியில் (2005சனவரியிலிருந்து 2009 திசம்பர் வரை) 3797 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளாகள் என தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றது. ஆனால் தமிழக அரசின் புள்ளிவிவரமோ 3 விவசாயிகள் மட்டுமே இந்த காலகட்டத்தில் தற்கொலை செய்துள்ளார்கள் என்கின்றது. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும், இப்படியா ஈவு, இரக்கமே இல்லாம பொய் சொல்றது. வாசகர்களுக்காக தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளி விவரமும், தமிழக அரசின் புள்ளி விவரமும். இவ்விரண்டு புள்ளி விவரங்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெறப்பட்டவையே.(1)தமிழக விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிவரங்கள்
இதை பற்றி வீரபாண்டிய ஆறுமுகத்திடம் கேட்க (அதாங்க விவசாயத்துறை அமைச்சர்)அவரு சொல்றாரு தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவரம் தப்பாம் ?. மேலும் மேலும் தமிழக அரசு காவல் துறை தலைமை இயக்குநரிடமிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிவரங்கள் பெற்றுவருவதாகவும் அவர் கூறினார். சரி இந்த தேசிய குற்றவியல் பதிவாணையம் புள்ளிவிவரங்களை எங்கிருந்து வாங்குகின்றது என பார்த்தோமேயானால் அதே தமிழகத்தில் உள்ள காவல் துறை அலுவலகத்தில் இருந்து தான் அவர்களும் இந்தப் புள்ளிவிவரங்களைப் பெறுகின்றார்கள். இந்தப் புள்ளிவிவரங்களைப் பற்றி கடந்த எட்டு வருடங்களாக நாட்டில் நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளை ஆராய்ந்து வரும் நாகராச் (அபிவிருத்திக் கல்லூரி சென்னை) கூறுகையில் தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவரங்கள் நம்பத்தகுந்தைவையே, மேலும் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்த தற்கொலைகளை பதிவு செய்யும் உள்ளூர் காவல்துறையின் மூலமே பெறப்பட்டவையே என்கின்றார் . (1)
இந்த நிலையில் எனக்கு அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகின்றது கருணாநிதி அவர்களே. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விசயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து தங்களது இலவசத் திட்டத்திற்கு சாட்டையடி கொடுத்தாரே, அது தான் அந்த நிகழ்வு. இப்பொழுது அந்த நிகழ்விலிருந்து சில வரிகள்….
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விசயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விசயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,தொலைக்காட்சியை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் 'மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதை விட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?. துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும்…. என்று நீண்டது அந்த மனு.இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் தொலைக் காட்சியையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விசயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் பேசிய விசயகுமார்…
"நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்''
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விசயகுமார்.
அந்தக் கடிதத்தில் 'கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
……………..
அதே போல கருணாநிதி அவர்களே வெறும் எந்திரன், இளைஞன் மாதிரி படங்கள மட்டும் பார்த்துட்டு இருக்காதீங்க அப்பப்ப பீப்ளீ நேரலை (Pepli Live) போன்ற படங்களையும் பாருங்க அப்பத்தான் விவசாயிகளோட பிரச்சனை என்னன்னு புரியும்.
இந்த ஏழை விவசாயி கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கு உணர்த்தும் தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியா? அல்லது தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவரம் சரியா? என..
தரவுகள்.
1) Source: New Indian Express, Sunday Express, 09.01.2011 /
http://epaper.expressbuzz.com/NE/NE/2011/01/09/index.shtml
Muthamizh
Chennai
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment