Sunday, January 23, 2011

[கனடா தமிழ் Canada Tamil] Re: [தமிழ் மன்றம்] தமிழக மீனவர் ஜெயக்குமார் சுட்டுப் படுகொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்



இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கலைஞர்


இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.


22.01.2011 இரவு 11 00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது. 


இதனை அறிந்த முதல்வர் கருணாநிதி இன்று (23 1 2011) தன்னைச் சந்தித்த மத்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம்   இச்சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, இது தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




2011/1/23 T BHARATHI <sanbharas@gmail.com>





தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நாம் இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். நாம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் வேளையில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது.

மீனவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இம்மாதிரியான சுட்டுக் கொல்லும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுடன் பேசி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என்றார்.




2011/1/23 Muthamizh Vendhan <muthamil78@gmail.com>


நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.


நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது


இந்திய அரசின் கண்டனத்திற்கு பிறகும், ராமேஸ்வரம் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, சனிக்கிழமை (22.01.2011) கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47278

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment