Thursday, January 13, 2011

[கனடா தமிழ் Canada Tamil] மீனவன் சுட்டுக்கொலை..! தமிழகத்தில் கொதிப்பலை..? பிரதமருக்கு இந்த தடவை தந்தி - கருணாநிதி..! ஈழதேசம் செய்தி..!

பொங்கல் பரிசை கொடுத்துள்ளது சிங்கள கப்பல்படை என்று சீமான் தெரிவித்தார்.  சிங்கள காவாலிப்படையால் தமிழக மீனவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட ( அது என்ன கொடூரம் என்று தெரியவில்லை..) சம்பவத்தால் தமிழக  மக்களிடையே கொதிப்பும் ஆவேசமும் கிளம்பியுள்ளது என்று பொய் சொல்லி எழுதுகிறார்கள்.  எல்லாம் தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் கொதிப்பு ஆவேசம் என்று சொல்லுகிறார்கள்.  எப்படி கொடூரமாக கொல்ல முடியும்..?  துப்பாக்கியால் சுட்டவுடன் உயிர் பிரிந்து விடும்..?  பின் எங்கே இருக்கிறது கொடூரம்..?  கொடூரம என்றால் என்ன என்று முள்வேலி மக்களை கேட்டுப் பார்க்க வேண்டும்..?  துப்பாக்கியுடன் உள்ள சிங்கள கப்பல் படை என்ன முதுகையா சொரிந்து கொள்ள முடியும்..? கடலில் தென்படும் கடலில் மீன்பிடி தொழில் செய்யும் தமிழவனை மீனவனைத்  தானே சுட முடியும்..?

சிங்கள கப்பல் படை எப்பொழுதும் சுட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று விருப்பமா..என்ன?  இந்தியக் கப்பல் படைபோல துப்பாக்கிக் குண்டுகளை  துருப்பிடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை அவர்களுக்கு  அவ்வளவுதான்.  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்ற மீனவரை சிங்கள கப்பல் படை சுட்டு அந்தக் குடும்பத்தை சோகத்தில் முக்கியுள்ளது.  முன்பு விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் இருந்தார்கள். அப்பொழுது இந்த பகுதிக்கு வரமுடியாத சிங்கள கப்பல் படை, தற்பொழுது கடற்புலிகள் இல்லாத காரணத்தால் இந்தப் பகுதிக்கு வரும் பொழுதெல்லாம் ஏராளமான தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள்.வன் கொடுமை செய்கிறார்கள்.  முன்பு ஒரு 500 பேருக்கு மேல் சுட்டுக்   கொன்றிருக்கிறார்கள்.  மேலும் சீமான் அவர்கள் சொன்னதைப் போல இறந்த பாண்டியன் உடலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு   இந்தியா வழங்கிய குண்டாகத் தான் இருக்கும்.துயரத்தில் இருக்கும் பாண்டியன் குடும்பத்தினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். போஸ்ட் மாடம் செய்த பிறகு பெற்ற உடலில் உள்ள துப்பாக்கிக் குண்டுகளை  கேட்டுப் பெற வேண்டும். மாவட்ட அரசு மருத்துவனையில்.

மீனவன்   சுடப்பட்டான் என்று செய்தி கிடைத்ததும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.பார்த்தார் அம்மையார் தனது கட்சியினரை விட்டு தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்கள்.  உடனே தி.மு.க. வும் இன்று பேசுவார்கள்.  மேலும் கருணாநிதி அவர்கள் இந்த தடவை பிரதமருக்கு தந்தி அடித்து உள்ளார்.  அது சரி புது தில்லி பிரதமர் அலுவலகத்திற்கு தினசரி லட்சக்கணக்கில் தந்திகள் வருமாம்.  வேலை வெட்டி இல்லாதவர்கள் அனைவரும் செய்யும் ஒரே வேலை பிரதமர் அலுவலகத்திற்கு தந்தி அடிப்பது தான். அந்த தந்திகளை பிரிக்காமல் அனாதையாக கிடக்கும் மூட்டைகளை அப்படியே எடைக்கி போட்டு விடுவார்களாம் அங்கு உள்ள, அங்கு வேலை பார்க்கும் சம்பளம் பத்தாத ஊழியர்கள்.  தமிழகத்தில் என்னடா என்றால் எதற்கெடுத்தாலும் தந்தி அல்லது கடிதம் எழுதுகிறார்கள்.  தந்திக்கே இந்த நிலைமை என்றால்,  கடிதத்தின் நிலைமையை சொல்லி மாளாது.

அ.தி.மு.க.வினர் சட்டசபையில் கூறிவிட்டார்கள்.  சும்மா எதற்கெடுத்தாலும் தந்தி கடிதம் என்று இல்லாமல் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று சொன்னார்கள்.என்ன நடவடிக்கை என்று சாமார்த்தியமாக சொல்லாமல் நடவடிக்கை என்று வெறுமனே சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் தேர்தல் வரும் நிலை வேறு.  இந்த தேர்தல் மட்டும் வரும் மே மாதம் வராமல் இருந்தால் இவர்கள் அனைவரும் அட போங்கப்பா.." இவனுக்கும் வேற வேலை இல்லை..அவனுக்கும் வேற வேலை  இல்லை " என்று சொல்லி இருக்க மாட்டார்களா என்ன ?  அதாவது நம்ம மு.க. அவர்கள் கொதிப்படைந்து  போய் கடிதம் எழுதி அதை தந்தியாக அனுப்பி உள்ளாராம்.

சீமான் சொன்னதுதான் உண்மை..!  பொங்கல் பரிசு கொடுத்து உள்ளார்கள் சிங்களவர்கள் தமிழனுக்கு.  பரிசுகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் சிங்களவர்கள் தமிழனுக்கு கடந்த சில வருடங்களாக.உடனடியாக இதுகுறித்து இந்திய அரசு,  இலங்கை அரசுடன் பேச வேண்டும்.  இலங்கை கடற்படையின் கொலை வெறி அட்டகாசம் அளவுக்கு மீறி போய்க் கொண்டிருக்கிறது.  இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் அவசரம் என்று முதல்வர் கூறியுள்ளார்.பேராசைதான் காரணம் என்று இந்த முறை ஏனோ சொல்லவில்லை.  சரி கடித தந்தி..! ( அட.. புது வார்த்தை கிடைத்து விட்டது.  'கடித தந்தி' வாசகர்கள் இருமுறை சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்..!  ) பிரதமருக்கு கிடைத்து அல்லது ஏதாவது ஒரு ஊழியர் அவரும் தமிழராக இருந்து இந்த கடித தந்தி மிக முக்கியமானவை என்று கருதி,  ஒருவழியாக பிரதமரிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்..!

என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பார் பிரதமர் மன் மோகன் சிங்..!  வீரத்திற்கு பேர் போன சிங்கு கூட்டத்தில் இப்படி ஒரு சிங்கு..!  அட இவனுகளுக்கு வேற வேலையே இல்லை.இங்கு  தலைப்பாய் கழண்டு விழும் அளவிற்கு வேலை மேல் வேலை இருக்க,  இந்த நாட்டின் பெயரையும் என் பெயரையும் உலக அளவில் கெடுத்த இந்த சோணகிரி தமிழன் இருந்தால் என்ன,செத்தால் என்ன என்று கோபம் வருமா..வராதா..?  மேலும் இந்த வயதான காலத்தில் நடவடிக்கை என்றால் ?  காலையில் எழுவதும், பின் காலை மதிய மாலை இரவு நேர உணவு உட்கொள்வது, பின் படுத்து  தூங்குவதற்கு, மிகுந்த அசதியாகவும் சோர்வாகவும் இருக்கும் ஒரு கால கட்டத்தில் போய் இலங்கை அரசுடன் பேசுவதா..?  நடவடிக்கை எடுப்பதா..?  என்று கோபம் வருமா வராதா..?  ஆக மீனவன் மட்டும் கோபமாக உள்ளான்.  முக்கால் வாசி தமிழன் கேரள போலீஸ்காரனிடம் லத்தியால் அடி வாங்கிக் கொண்டிருக்கிறான் சபரி மலையில்..!  மக்கள் கொந்தளித்து விட்டார்கள் என்று எப்படி பொய் சொல்கிறார்கள் பாருங்கள் இந்த ஊடங்கங்கள்..!   இணையம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நினைக்கவே ஈரக்குலை நடுங்குகிறது.

-ஈழதேசமூடாக சங்கிலிக் கருப்பு -

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=4813:2011-01-13-10-32-50&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment