Tuesday, January 25, 2011

[கனடா தமிழ் Canada Tamil] இலங்கை அகதிகள் படத்தை (“செங்கடல்”) தடை செய்வதா? தணிக்கை குழுவுக்கு பெண் இயக்குனர் கண்டனம்

சிங்கள அரசு கொடுமைகளில் தப்பி தமிழகம் வரும் ஈழத்தமிழர்ளை மையப்படுத்தி "செங்கடல்" என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது. தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நிலைமை தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுதல், கடலோர மீனவர்கள் கொதிப்பு போன்றவை காட்சியாக்கப்பட்டு உள்ளன.
 
லீனா மணிமேகலை இந்த படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை குழு செங்கடல் படத்துக்கு அனுமதி மறுத்து ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது.
 
இதுகுறித்து லீனா மணி மேகலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
 
செங்கடல் படத்தில் இலங்கை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர்கள் அவல நிலையை பதிவு செய்துள்ளோம். இது மக்கள் சினிமா அவர்களின் விமர் சனங்களை அப்படியே படமாக்கியுள்ளோம். இந்த படத்தை தடை செய்ய முயற்சிக்கின்றனர்.
 
டி.வி. சேனல்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அப்படியே வருகிறது. ஆபாச படங்களையும் இண்டர்நெட்டை திறந்தால் எது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் படங்களில் உண்மை தன்மைகள் இருக்கக்கூடாது என்கின்றனர்.
 
மக்களின் யதார்த்தங்களை படமாக்குவதை தடுக்கின்றனர். சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் ஒரு உயிர் போனால் நாடே கொந்தளிக்கிறது. தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப்படுவதை பார்த்து சொரணை இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
 
ஒரு படைப்பாளி என்ற முறையில் அதை படமாக்குவது தவறா? தணிக்கை குழு முடிவை எதிர்த்து டெல்லி டிரிபியூனல் கோர்ட்டுக்கு போய் உள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க ஜனநாயகத்தின் கடைசி கதவு வரை தட்டுவோம்.
 
இவ்வாறு லீனா மணி மேகலை கூறினார்.

http://www.maalaimalar.com/2011/01/25124431/ban-to-srilanka-refugees-cinem.html

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment