Wednesday, January 12, 2011

[கனடா தமிழ் Canada Tamil] TAMIL EELAM OUT OF INDIA? - பி. ஆர். அரன் அவர்கள் வெளிப்படையான பகிரங்க விவாதத்திற்கு தயாரா?...

 
 Tamil Eelam out of India? B R Haran அவர் எழுதிய கட்டுரையில் பல தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ள விடயங்களுக்கு ஆதரம் வெளியிட தயாரா?.
 
இந்துத்துவ அமைப்புகளும், அவரை சார்ந்தவர்களும் மட்டும் யோக்கியம் மற்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற போக்கிலேயே அவர் எழுதிய கட்டுரை உள்ளது.
 
Malegon blast!
 
மக்கா மஸ்ஜித்-மாலேகான்-சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்புகள்! சுவாமி அசிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் 
 
ஹைதராபாதில் உள்ள மக்காமஸ்ஜிதின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி அசிமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதுமட்டும் இன்றி, "2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான்மஸ்ஜித் ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் காவி பயங்கரவாதிகளால்தான் நடத்தப் பட்டது. இது குறித்து தன்னால் உறுதியாக தெரிவிக்க முடியும்" என்றும் அசிமானந்தா கூறியுள்ளார். 
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமிஅசிமானந்தாவிடம் சிறந்த முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து மனம் திருந்திய மைந்தனாக தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
 
ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடைய அசிமான ந்தா என்ற காவி பயங்கரவாத சிந்தனை கொண்ட சாமியார், குஜராத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் மோடாஸாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் காவி பயங்கர வாதிகளுடன் இணைந்து செயல்பட்டு ள்ளார்.
 
இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும் மூளையாக இருந்து செயல்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
 
சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்தி ரேஷ்தான் என்று அசிமானந்தா கூறியுள்ளார்.

இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி யிடம் அளித்த வாக்கு மூலத்தில், குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கர வாதக் குழுக்களை அசிமானந்தா அடையாளம் காட்டியுள்ளார்.
 
மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பது தனக்கு தெரியும் என்றாலும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
 
சிறையில் சுவாமி அசிமானந் தாவிடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் அசிமானந்தா தன் தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப் படுகிறது.
 
காவி பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர்க் கொண்டதாக காவி பயங்க ரவாதம் உள்ளதையும் அசிமா னந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வரும் நிலையில், அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றின் விசாரணைக்கு உதவக்கூடும்.
 
2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும் சிபிஐயும் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தன. அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
 
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொபைல் போன் விற்பனையாளரான கலீம், ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத் திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேறு ஒரு வழக்கில் கலீம் கைது செய்யப்பட்டு சுவாமி அசிமானந்தா அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கலீமுடன் கலந்துரையாடியபோது, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் சிறையில் இருக்கும் போது, கலீம் எனக்கு அதிகமாக உதவிகள் செய்தார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். எனக்காக உணவும் கொண்டு வந்து தந்தார். கலீமின் நன்னடத்தை என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஏராளமான அப்பாவிகள் சிக்கிய இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று என்னை என் ஆழ்மனம் தூண்டியது என்று சுவாமி அசீமானந்தா தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இனிமேலாவது காவி பயங்கரவாதிகள் செய்த தேசத்துரோக செயல்களை, குண்டு வெடிப்புகளை மக்கள் முன் அம்பலப் படுத்தி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து குண்டு வெடிப்பு வழக்கு களையும் மறு ஆய்வு செய்யவேண்டும். அசீமானந்தாவின் ஆசிரமத்திற்கு வருகை தந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் இன் முன்னாள் தலைவர் சுதர்சன் உள்ளிட்ட பெரும் தலைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.

  குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள் 
2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இவர்கள். மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் இது பாக்கிஸ்தான் சதி என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இப்போது இது இந்து தீவிரவாதிகளில் கோர தாக்குதல் என தெரியவதுள்ளது.

 மகாராஷ்டிராவில் மாலேகான்
 
மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர்
 
ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி
 
கோவாவில் மார்காவோ
 
ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய 'எழுச்சி கொண்ட இந்துக்கள்' சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர். 
 
ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன
மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள
 
தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார்

இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித்

ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா

மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்

மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன
 
இவை ஒருபுறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக் குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது. மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும். எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ "சிமி" அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள். சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப். இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை

காந்தியை கொன்றது யார்? 

காந்தியை கொன்றது யார்?
 
கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டது யார்?
 
காமராஜரை கொல்ல சதி திட்டம் திட்டி கொல்ல முயன்றது யார்?
 
நேதாஜி சுகந்தர இந்தியாவின் தலைநகராக அறிவித்தது எந்த நகரத்தை?
 
அவரது தளபதிகளில் எத்தனை முஸ்லிம்கள் இருந்தார்கள்?
 
இந்தியாவை முகலாயர்கள் 700 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய முடிஞ்சும் ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியவில்லையே ஏன்?
 
செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி கப்பல் வாங்க பொருள் திரட்டிய பொது தன் சொத்தை முழுவதுமாக வழங்கியவர்கள் யார்? யார்?
 
வரலாற்றில் பாரதியாரை மறைக்க ஆரியர்கள் பாடுப்பட்டார்கள் ஜீவா அதே வெளிகுனர்ந்தார் ,ஆனால் தோழர் ஜீவாவைவையே மறைத்தார்கள்
 
இராமமூர்தியை மறைத்தார்கள்
 
வீரன் கோள் அழகுமுத்துவயும் மறைத்தார்கள்,
 
அதே போலவே இந்திய சுகந்திரத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கையும் மறைத்து விட்டார்கள் ரத [ரத்த ] யாத்திரை நடத்தி இந்தியாவெங்கிலும் கலவரம் நடத்தியது யார் ??
 
பாபரி பள்ளியை இடித்து கலவரம் நடத்தி சுமார் 20000 முஸ்லிம்களை படுகொலை செய்தது யார் ??
 
கோவையில் 1997 ல் நவம்பரில் 28,29,30, கலவரம் நடத்தி சுமார் 22, அப்பாவி முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்றது யார் ???
 
குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை கலவரமாக்கி சுமார் 22000,அப்பாவி முஸ்லிம்களை கண்ட துண்டமாக வெட்டி கொன்ற தீவீரவாதிகள் யார் ?????
 
குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்களை என்கௌன்ட்டர் செய்து போட்டு தள்ளியது யார் ??
 
இந்தியாவிலேயே வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் தொடக்கம் அதை மறைத்தது யார்?  ஏன்?
 
லஷ்கரைவிட இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி

தண்டகாருண்யா-விலும், காசுமீரிலும், மணிப்பூரிலும், அஸ்ஸாமிலும் என்ன நடக்கிறது என்பதை விவாதிக்க டி.ஆர். அரன் தயாரா?

அதை விடுத்து தமிழக தலைவர்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரிப்பதை அவர் நிறுத்திகொள்ளவேண்டும்.வீட்டை, நாட்டை, கணவனை, தாய் தகப்பனை, குழந்தைகளை எல்லாம் இழந்து மனரீதியாக இன்று இனி என்ன என்றே தெரியாத அம்மக்களுக்காக குரல் கொடுத்தால், கூட்டம் போட்டால் இவர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்கிறார்..
 
நீங்கள் குற்றம்சாட்டியுள்ள அமைப்புகளின் தலைவர்களை அழைத்து வருகிறோம்... வெளிப்படையான அரங்கு, பத்திரிக்கைகள் முன்னிலையில் வெளிப்படையான விவாதத்திற்கு டீ.ஆர். அரன் தயாரா?
 
 Muthamizh
Chennai

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment