Monday, April 5, 2010

Re: சூழ்நிலை சொல்றேன், கவிதை சொல்ல முடியுமா!?



6-4-10 அன்று, Ahamed Zubair A <ahamedzubair@gmail.com> எழுதினார்:


3 வருசம் முன்ன எழுதினது. இப்பவும் கரெக்டா இருக்கு :-))

ரியால் மட்டுமா???


பாலைவனமெனப் படித்த
பாடம் மறக்கும் முன்னே
சிறகுகள் முளைத்ததே
சவுதியும் வந்ததே.

இந்தியாவில் இடமென்றால்
இங்கோ அது வலமாகும்
வாகனத்தில் மட்டுமில்லை
வாழ்விலும் அதே நிலை.

பணத்தின் கனத்தை பார்த்துவிட்டால்
பொதுவாய் செலவும் குறைந்து விடும்.

கனமாய் பொழுது அமைந்துவிட்டால்
பணமும் பொருளை இழந்துவிடும்.

"வைத்தியனுக்கு கொடுக்கும் காசை
வாணிகனிடம் கொடு"
பழமொழிகள் பொய்யாகுமென
கற்றதும் இங்கு..

ரியால் மட்டுமா பெற்றேன்
ரியாதில் பெற்றேன் இன்னுமதிகம்.

இரவின் தனிமை
மனதின் வெறுமை
பணத்தினும் அதிக கனவுகள்
கால்வலிக்காக போனால்
காதுவலிக்கு மருந்து
இழக்கும் அறிவு
வளரும் வயிறு
கொட்டும் மயிர்
பவுடர் பால்
கட்டில் கனவு
தொட்டில் நினைவு

ஊருக்கு போகையில் மட்டும்
முகம் காட்டும் உறவு

சினை பிடிக்க ஓட்டிச்சென்று
மாடு குதித்தோட
பாய்ந்தோடி பிடித்த
இளமையின் இழப்பு...

எதிர்மறை மட்டுமா?
இல்லை நேர்மறையுமுண்டு

இல்லையெனும் போது
சாய்ந்து அழ ஒரு தோள்

சவூதி வரும் முன்னே
எப்போது பார்த்தாலும்
பார்க்காது போகும்
என்னவளின் நொடிப்பார்வை

திட்டுதலே தொழிலான
தந்தையின் பரிவு

இழந்தவை அதிகமா??
பெற்றவை அதிகமா??
அவனவனுக்குத் தெரியும்
வலியும் வேதனையும்

"காசு பெரிசில்லடா"
சொல்லும்போதே
"இந்தமாசம் கொஞ்சம் கூட அனுப்பு"
அப்பாவின் குரல்

தொலைபேசியில் மட்டுமே நெருங்கும்
பத்து வயது தங்கை
நகை கேட்கச் சொல்லும் அம்மா
நகைத்துக்கொள்வேன் உள்ளுக்குள்

பன்னிரண்டாம் வகுப்பில்
படிக்கும் தம்பிக்கு
போதாதாம் கண்ணிரண்டு
"கேமரா மொபைல் வாங்கி வா"

பேசப் பேச கேட்டுக்கொண்டும்
செவிடாகத்தான் இருக்கிறேன்.

நான் பேச நினைப்பதல்லாம்
பணம் பேசப் பார்க்கிறேன்.

பணம் பேசும் உலகத்தில்
மனம் மெளனம் காக்கிறது.

ஆம், ரியால் மட்டுமல்ல..
பெற்றிருக்கிறேன் பலவும்..

வெளிச்சம் நோக்கிய பயணம்
விடியல் தான் கொஞ்சம் தூரமாய்த் தெரிகிறது!!
 
 
ரொம்ப நல்லா இருக்கு சுபைர், நீங்க இப்ப திர்ஹாம்ஸ்க்கு மாறீட்டீங்க
நான் இன்னும் நீங்க சொன்னா ரியால் வாழ்க்கையில்தான் இருக்கேன்  :-))))))))

 

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment