Foie Gras
Foie Gras என்பதன் பொருள் 'கொழுப்பு ஈரல்' ;(Fat Liver)
Fat Liver என்பது பிரான்ஸ் நாட்டில் உற்பத்தியாகின்ற மிக மிக ஆடம்பரமான மெனு (ஆநரெ). ஆனல் இங்கிருப்பது ஒரு வாத்தை நிர்ப்பந்தித்து உணவூட்டி அவற்றின் ஈரலில் கொழுப்புப் படியச் செய்து இறக்க வைப்பதன் மூலம் பெறப்படும் உணவாகும். இதற்கு ஆங்கிலத்தில் (Fatty Liver Disease) சொல்லப்படும்.
இந்த ஆச்சரியமான உணவின் அடிப்படை மூலம் என்ன என்பதை நோக்குவோம்.
உணவை உட்கொள்வதற்கு அன்னங்கள் வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றன. அவை விருப்பப்படாவிட்டாலும் சரியே.
இங்கு உணவுக்குளாய் தொண்டையிலிருந்து வயிற்றுக்கு அனுப்பப்படுகிறது… அது எந்தவொன்றையும் உண்ண விருப்பாவிட்டாலும் சரியே
இது அதனுடைய ஈரலை பெரிதாகவும் கொழுப்பால் நிறைந்ததாகவும் மாற்றுவதற்காகச் செய்யப்படுகிறது.
இந்த அன்னங்கள் அசைவதற்குப் பயன்படுத்தும் சக்தியை மீதமாக்கி அவற்றையும் கொழுப்பாக மாற்றுவதற்காக அவை அசைவதைத் தடுக்கம் வகையில் சிறிய கூடுகளில் ஒரே திசையில் இருக்குமாறு செய்யப்படுகின்றன.
அவைகளின் கண்கள் பேசும் கவலைதான் எத்தகையது
ஒவ்வொரு நாளும் நிற்பதனால் அவைகளின் கால்கள் வீங்கிக் காணப்படுகின்றன. அவைகள் தூங்கவேண்டும் என்ற அவசியமில்லை, காரணம் அவைகள் உணவு ஊட்டப்படுவதற்காக மீண்டும் பிடிக்கப்பட இருப்பதால்.
தாமாகவே தற்காத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் அம்முயற்சி எந்தப்பயனும் அற்றது.
இவ்வாழ்க்கைதான் எத்தனை கவலை தோய்ந்தது…..
அவைகள் மரணத்தைத் தழுவும் வரை அல்லது அந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு நிற்க இயலாது என்ற நிலையை அடையும் வரை உண்பதற்காக வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றன.
அதனுடைய வாயில் உணவு இருப்பதையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
உயிர் வாழ விடப்பட்டவைகள் கூட தீயினால் சுட்ட கழுதைகள் போன்றுள்ளன. அவைகளின் இருக்கைகளில் இருந்து இலகுவாக இரத்தம் சொட்டுகிறது.
இவைகள் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட நிலையில் கொடுமையாகக் கொல்லப்படுகின்றன.
அப்பாவியான விலங்குகளுக்கு தினமும் கொடுக்கப்படும் தொந்தரவுகளையும் கொடூரத்தையும் நிறுத்துங்கள்.
மேற்கூறப்பட்ட கொடூரமான வழிகளில் செய்யப்பட்ட உணவைத்தான் முகுஊ மற்றும் ஆநஉனழயெடனள களில் எம்மவர் சுவையுணவாக உட்கொள்கின்றனர் என்பது கவலைக்குரியதே!
சிந்திப்போம்
கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்போம்.
எமதும் பிறரதும் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment