Saturday, April 3, 2010

முசந்தத்தில் ஓர் நாள்... ஒமான் கரையோரம்...!!!

17. ஹோட்டல் வந்தவுடன், மறுநாள் காலையில் செல்லவிருக்கும் தோவ் குரூஸிற்கு பணம் கட்டி விட்டு, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டோம். அதன்பின், ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். கார்னிஷ் பக்கம் போகலாம் என்று வண்டியை எடுத்து, பின் வழி தவறி நாலா பக்கமும் மலைகள் இருந்த இடத்திற்கு வந்து விட்டோம். அந்த இடம் டெட் எண்டாக முடிந்துவிட்டது.

IMG_8228p.jpg

17.

IMG_8231p.jpg


18. பின்னர், வந்த வழியே திரும்பி சென்று, இரவில் கடலோரம் வண்டியை நிறுத்தி, கார் ஸ்டீரியோவை ஓட விட்டு, நொறுக்குத் தீனி கொறித்துக்கொண்டு, கையோடு கொண்டு சென்றிருந்த ட்ரைபாடை வைத்து சில ஃபோட்டோவை எடுத்தோம்.

IMG_8255p.jpg

19. ஷட்டர் ப்ரையாரிட்டி மோடில் 15 செகண்ட்ஸ் டைம் செட் பண்ணி விட்டு, நண்பர்களை ஆடாமல் அசையாமல் உட்காரச் சொல்லி, கஷ்டப்படுத்தி, நான் செய்த லூட்டிகளுக்கு, வேறு வழியில்லாமல் எல்லோரும் ஒத்துழைத்தார்கள் :)))

IMG_8261p.jpg


20.

IMG_8271p.jpg


இந்தப் படங்களெல்லாம் சேவ் ஃபார் வெப் கொடுத்து, 25 குவாலிட்டியில் சேவ் பண்ணியது. இப்பொழுது சீக்கிரம் லோட் ஆகும் என்று நினைக்கிறேன்.

ஆலோசனை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி!

--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment