http://tamil2friends.com/node/26717
ட்ரூபால் - ஒரு சிறிய அறிமுகம்
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு உள்ளடக்க தகவல் மேலாண்மை கட்டமைப்பு (Content Management Framework - CMF).
அதாவது ஒரு இணையதளத்திலோ அல்லது மற்றைய மென்பொருளிற்கோ தேவைப்படும் பல்வேறுவகையான் தகவல்களை நமக்கு தேவையான வகையில் தொகுக்கவும், மேலாண்மை செய்யவும் உதவும் மென்பொருள்.
இதை உருவாக்கியவர் Dries Buytaert
ட்ரூபால் நிறந்த மூலமாக (Open Source) இலவசமாக கிடைக்கிறது. அதாவது யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்ய விரும்பினால் செய்து கொடுக்கலாம். புதிய வசதிகளை சேர்க்கலாம்.
இது திறந்தமூல மென்பொருட்களின் காலம்.. பெரும் ஜாம்பவானாக திகழந்த மைக்ரோசாப்ட்டை திறந்த மூல இயங்குதளமான லினக்ஸ் பின்தள்ளி விட்டதைப்போல இன்று பல முன்னணி மென்பொருட்கள் திறந்தமூலமாக உலகெங்கும் உள்ள பல தன்னார்வமுள்ளவர்களால் சிறப்பாக ஒருங்கிணைந்து உருவாக்கப்படுகிறது. அதே போல ட்ருபாலும் உலகெங்கிலுமுள்ள பல மில்லியன் நபர்களால் பயன்படுத்தப்பட்டு செதுக்கப்படுகிறது.
ட்ரூபால் யாருக்கு தெவைப்படும்?
- இணைய தளங்கள் நடத்துபவர்கள்
- சொந்தமாக இணைய தளம் வைக்க விரும்புவர்கள்
- இணைய தளங்கள் வடிவமைப்பாளர்கள் (Web Designers)
- PHP கணினி வல்லுநர்கள்
- கணினி, இணையம் பயில்வோர்கள்
ட்ரூபாலில் அப்படி என்ன இருக்கிறது?
தற்போதைக்கு ட்ரூபாலில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பல்வேறு நபர்களால் எழுதப்பட்ட நீட்சிகள் கிடைக்கிறது.
அதிலும் முக்கியமாக ஒரு சாதாரண இணயதளத்திற்கு பயன்படும் கீழ் காணும் வசதிகளை கூறலாம்.
- பதிவுகள் – Blogs, Articles ...
- நூல்கள் - Books
- குழுமங்கள் – Groups
- விக்கி - WIKI
- வாக்குப்பதிவுகள் – Polls
- சமூதாய அரங்கம் – Community
- ஆன்லைன் வணிகம் (E-Commerce)
- படங்கள் மற்றும் நிகழ்பட தொகுப்புகள்
- பயனர் மேலாண்மை, அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு
- செய்தி ஓடைகள் – Feeds
- உலகமயமாக்கம் - I18n
- தேடல் - Search
- ஆர் எஃடி - RFD
மேலும் நிறைய வசதிகளை உள்ளடக்கியது ட்ரூபால்.
ட்ரூபால் ஆனது PHP எனும் கணினி மொழி மூலம் எழுதப்பட்டது ஆகும். ட்ரூபால் தன் தகவல் மேலாண்மைக்கு MYSQL அல்லது PGSQL ஐ பயன்படுத்திக்கொள்ளும், PHP மற்றும் MYSQL பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை எனினும் அதைப்பற்றி சில வரிகள்..
PHP
PHP ஒரு கணினி மொழி. இதுவும் இலவச மென்பொருள் ஆகும். PHP ஐ முன்பு பலரும் ஏளனமாக பார்த்த காலம் உண்டு. ஆனால் இப்போது நிலமையே வேறு. இன்றைய கணினி இணையத்திற்கான மென்பொருள் திட்டங்களில் PHP ஜ தெரிவு செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். எளிமை, இலவசம், இணைய தளத்தை நிறுவ ஆகும் குறைந்த பொருட்செலவு மற்றும் அந்த மொழியில் கிடைக்கும் மென்பொருட்கள் போன்றவையே இதற்கு காரணங்கள் ஆகும்.
எல்லோராலும் விரம்பப்படும் பேஸ்புக் தளம் இந்த PHP மொழியினால் எழுதப்பட்டது தான்.
*ட்ரூபாலை பன்படுத்த PHP மொழி தெரிந்திருக்க வேண்டுமா?*
தேவையில்லை. கணினி பயனாளராக கொஞ்சம் அனுபவம் போதுமானது. ஒரு சாதாரண தளத்தை இதை வைத்தே நாம்
உருவாக்கிக் கொள்ள முடியும். நாமாகவே ட்ரூபால் நீட்சிகள் ( மாட்யூல்கள் ) எழுத மட்டுமே PHP தெரிந்திருக்கவேண்டும்.
MYSQL
இது ஒரு இலவச தரவுதள மேலாண்மை (Database management) தொகப்பு. ட்ரூபாலானது நமது இணைய தளத்தின் பக்கங்களை எல்லாம் இதில்தான் அட்டவணைப்படுத்தி சேமித்து வைத்திருக்கும்.
இதே கட்டுரையினூடே முக்கிய PHP நிரல்களையும் MYSQL பற்றியும் பார்க்கலாம்.
ட்ரூபால் போலவே பலரால் மிகவும் உபயோகப்படுத்தப்படும் மற்ற இரு தொகுப்புகளாவன வேர்ட் ப்ரஸ்(Word Press) மற்றும் ஜூம்லா (Joomla) ஆகும். அவைகளை பயன்படுத்தி வந்தவர்களுக்கு முதலில் ட்ரூபால் கடினமாக தெரியலாம். ஏனெனில் இது வெறும் CMS போன்று இணைய தளத்திற்காக மட்டுமல்லாமல், பொது நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு CMF. ஒருவருக்கு எவ்வாறு ஒரு இணைய தளம் தேவையோ அதே போல ட்ரூபாலை வளைத்து செய்து கொள்ளலாம்.
--
தயவு செய்து இக்கட்டுரையில் வரும் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்சொற்கள் பயன்பாட்டில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
அடுத்த பகுதியில் ட்ரூபாலின் முக்கிய உறுப்புகளை காணலாம்
--
http://tamil2friends.com/node/26717
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment