அனுப்புநர்: Shenthil Elan <elan.shenthil@gmail.com>
தேதி: 28 ஜூலை, 2010 9:23 am
தலைப்பு: [Save-Tamils] சீன உளவுக் கட்டமைப்பில் நுழைந்துள்ள அசின்
பெறுநர்: save-tamils <save-tamils@googlegroups.com>
சீன உளவுக் கட்டமைப்பில் நுழைந்துள்ள அசின்
வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அசின் கலந்துகொண்ட மருத்துவ முகாம்கள் அவரால் நடத்தப் பட்டவையல்ல. மஹிந்த ராஜபக்சாவின் மகனான நமால் ராஜபக்சாவின் Tharunyata Hetak அறக்கட்டளையாலும், மகிந்தவின் மனைவியும், நாமலின் தாயுமான ஷிராந்தியால் நடத்தப்பட்டுவரும் Siri Liya Saviya அறக்கட்டளையாலுமே அந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு அறக்கட்டளை நிறுவனங்களும் தங்களின் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக அதில் கலந்துகொள்ளும் தமிழ் மக்களை சிங்கள பௌத்த மதச் சடங்குகள் பலவற்றிற்க்கு ஆட்படுத்திய பின்னரே "உதவிகளை"ப் பெற அனுமதிக்கின்றனர். இப்படிப்பட்ட "கொடை" விழாக்களிலேயே அசின் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார்.
மேலும் நாமல் மற்றும் ஷிராந்தியின் பெருந்தன்மையைப் புகழ்பாடியும் வருகிறார்.
ஷிராந்தியால் நடத்தப்பட்டுவரும் Siri Liya Saviya அறக்கட்டளையானது முழுக்க முழுக்க சீனாவின் பணத்தால் நடத்தப்பட்டுவருகிறது என்பதையும் இங்கு மனதில் கொண்டால், இதனால் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் அசினின் நடவடிக்கையால் ஏறபட வாய்ப்புள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
சீனாவுடன் ஷ்ராந்தியின் அறக்கட்டளை கொண்டிருக்கும் நெருக்கத்தைப் புரிந்துகொள்ள பின்வரும் கோப்புகளைக் காண்க:
இதற்கான வீடியோ ஆதாரம்:
http://video.aol.ca/video-detail/chinas-donation-for-siriliya-saviya-12-9-09/2249677233
இதுகுறித்த கூடுதலான படங்களுக்கு இணைக்கப்பட்ட பி.டி.எப் கோப்பைப் பதிவிறக்கம் செய்து காண்க.
இந்த இரண்டு அறக்கட்டளைகள் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நிறுவ எவ்வாறு பாடுபடுகின்றன என்பதை பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்:
http://www.dailynews.lk/2010/05/14/fea01.asp
அசினைப் பின்பற்றி இலங்கை செல்லவுள்ள பிற கலைஞர்கள் இந்தக் கருத்துக்களை மனதில் கொண்டால் நல்லது.
தோழமையுடன்
இன்பா – தாய் தமிழ்நாடு
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment