Thursday, April 28, 2011

[கனடா தமிழ் Canada Tamil] தமிழர்களை கட்டிவைத்து பிஸ்கட் சாப்பிடவைக்கும் போட்டி !

கடந்த 24ம் திகதி சாவச்சேரியில் இலங்கை இராணுவமும் தொழிற்சங்கமும் இணைந்து பெளத்த மற்றும் தமிழ் புத்தாண்டை கூடிக் கொண்டாடியுள்ளனர். நிகழ்வுகள் என்ற பெயரில் சில போட்டிகளை இராணுவத்தினர் முன்வைக்க அதில் முண்டியடித்து தமிழர்கள் கலந்துகொண்டது கண்கொள்ளாக் காட்சி. போட்டி நடத்துவதுபோல நடித்து தமிழர்களை மானபந்தப்படுத்தியது தான் மிச்சம் என்கிறார் வயதான தாத்தா ஒருவர். சிறுவர்களின் கைகளைக் கட்டி, தொங்கவிடப்பட்டிருந்த பிஸ்கட் துண்டை ஒரு நாய் கடிப்பது போல கடித்துச் சாப்பிடவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது இலங்கை இராணுவம். அதுமட்டுமா... தமிழ் பெண்களை அழைத்து தேங்காய் திருவவும் விட்டுள்ளனர்.

இராணுவத்தின் உறவினர்கள், அவர்களின் மனைவிமார் எனப் பல சிங்களப் பெண்கள் அங்கே அமர்ந்திருக்க தமிழ் பெண்களை மட்டும் அழைத்து தேங்காய் திருவும் போட்டி நடத்தியுள்ளது இலங்கை இராணுவம். முண்டியடித்துக்கொண்டு சென்ற தமிழ்ப் பெண்கள், நான் நீ எனப் போட்டிபோட்டு படுவேகமாக தேங்காய் திருவிக் காட்டியுள்ளனர். அதில் வென்ற பெண்ணுக்கு பரிசாம்... அதுமட்டுமா அதனைக் கைகொட்டி நகைத்தபடி பார்த்து நின்றனராம் சிங்களப் பெண்கள். எங்கள் தமிழச்சிகளுக்கு எங்கே சென்றது அறிவு ?

சில இளைஞர்களின் கைகளைக் கட்டிவிட்டு, வேறுசில பெண்களின் கண்களைக் காடிவிட்டு அவர்களைக் கொண்டு, இளைஞர்களுக்கு பால்சோறு ஊட்டச் சொல்லியுள்ளது சிங்கள இராணுவம். அதனையும் படுவேகமாக செய்துகாட்டவேண்டும் என்று துடிக்கும் சில தமிழர்கள். இதே இராணுவம் தான் தமிழ் இளைஞர்களின் கைகளையும், கண்களையும் கட்டி பிடரியில் சுட்டுக் கொண்றது என்று தமிழ் இனம் ஏன் மறந்தது ? பார்க்கக்கூடிய படங்களா இவை ? பட்ட துன்பம் எல்லாம் பறந்தோடிப் போய்விட்டதா என எண்னத் தோன்றுகிறது.

சிங்களவன் கைகளின் சிக்கி, தமிழனை அவன் ஒரு பகடைக்காயாக மாற்றி ஆட்டுவிக்க, ஏதும் அறியாத இனம்போல மாறிவிட்ட சில தமிழர்கள்.. சிங்கள இனம் படிப்பறிவற்றவர்கள், தமிழர்களே இலங்கையில் தலைசிறந்த கல்விமான்கள், அறிவுடையவர்கள் என எமது மூதாதையோர் சொல்லிவந்தனர். அதுவும் பொய்க்கும் நிலைதோன்றிவிடுமோ என்ற அச்சம் தான் மிச்சம் இருக்கிறது....

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment