---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்:
shantha kumar <shanthbt@gmail.com> தேதி: 27 ஆகஸ்ட், 2010 3:24 pm
தலைப்பு: [Save-Tamils] தமிழகத் தேர்தலுக்குத் தயாராகும் சிங்கள உளவுத்துறை!
பெறுநர்:
save-tamils@googlegroups.com கே.பி.'என அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் திரையில் நடத்தும் திரைக்கதை திருவிளையாடல்களை பெரிதும் ரசிப்பார்கள் தமிழர்கள். ஆனால்... தமிழர்களைக் குறிவைத்து திரைமறைவில் சிங்கள அரசு நடத்தும் திரைக்கதைகளுக்கு பெரிதும் உடந்தையாகிவருகிறார் முன்னாள் 'புலி'யான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன்.
அதன் ஒரு நகர்வுதான் பழ.நெடுமாறன், வைகோ, மகேந்திரன் (எந்த மகேந்திரன் என்பதை பெட்டிச் செய்தியில் காண்க) ஆகியோரைத் தொடர்புபடுத்தி இலங்கைப் பத்திரிகைக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டியும், அது தொடர்பாக தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் அதிர்வலைகளும்!
' '2009ல் இறுதி கட்ட போரின் போது இந்திய அரசு போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால், வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்காக புலிகளுக்குத் தவறான ஆலோசனைகளைச் சொல்லி போர் நிறுத்தம் ஏற்படாமல் செய்துவிட்டார்கள்'' என்பதுதான் இலங்கைப் பத்திரிகையான 'டெய்லி மிரர்'க்கு கே.பி. கொடுத்திருக்கும் பேட்டி.
இதற்கு பழ.நெடுமாறன், வைகோ, மகேந்திரன் எம்.எல்.ஏ. போன்றோர் கடும் மறுப்பு தெரிவித்திருக்க... கலைஞரோ, கே.பி.யின் பேட்டி என வந்திருக்கும் அந்த பகுதியை அப்படியே எடுத்து முரசொலியில் பிரசுரித்து, இதுபற்றி கே.பி. உண்மைகளை விளக்கவேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்... கே.பி.யின் பெயரிலான இந்தப் பேட்டி பற்றியும், அதன் பின்னணி பற்றியும் ஈழத்துத் தமிழ் நண்பர்களிடம் பேசினோம்.
''மிகத் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் கே.பி. இப்போது ஒரு கைதி. சிங்கள அரசின் விருந்தாளியாக அவர் மாறிப்போயிருந்த போதிலும் இன்னமும் அவர் ஒரு கைதிதான்.
சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினால் கூட, அதை சிறை கண்காணிப்பாளர் படித்துப் பார்த்து தணிக்கை செய்து சீல் வைத்துதான் அந்தக் கடிதத்தை அனுப்புவார்கள். சாதாரண கைதிக்கே இந்த நிலை என்றால், விடுதலைப் புலிகளின் முக்கியப் பிரமுகர் என குற்றம்சாட்டி சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட கே.பி. சுமார் பதினைந்து புலனாய்வு அதிகாரிகள் புடை சூழ கோத்தபய ராஜபக்ஷேவின் நேரடிக் கண்காணிப்பில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவர் கொடுக்கும் பேட்டி எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? ஆனால் கலைஞரோ கே.பி.யிடம் மேலும் சொல்லுங்கள் என கேட்கிறார்.
மேலும், இதே கே.பி.யை, பேட்டி எடுக்க 'வலம்புரி' உட்பட சில பத்திரிகைகளிலிருந்து பல நாட்களாக முயன்றுகொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'கேட்டுத்தான் சொல்லணும்' என்றே பதிலளித்த கே.பி... தனது 'நம்பிக்கைக்குரிய' டி.பி.எஸ்.ஜெயராஜ் மூலமாக டெய்லி மிரர் பத்திரிகையில் இந்த பேட்டியை அளித்திருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது...'கேட்டுத்தான் சொல்லணும்' என யாரைச் சொன்னாரோ அந்த கோத்தபய வகையறாக்களின் அனுமதிக்குப் பிறகே இப்படி ஒரு பேட்டியை அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் டி.பி.எஸ்.ஜெயராஜைப் பற்றியும் இங்கே சொல்லி-யாகவேண்டும். இவர் தொடர்ந்து ஈழப் போராட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற கோபத்தில், கனடாவில் உள்ள ஈழத் தமிழர்கள் இவரைத் தாக்கி காலை உடைத்தனர். இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என கருதி புலிகளை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தவர் அவர். பின்னாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட்டபோது, டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு முக்கிய பதவி கொடுத்தார் கே.பி. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, 'எல்லாரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்' என்று பதில் சொன்னார். ஆனால், சிங்களனையும் அரவணைத்துச் செல்லப் போகிறார் என்பது போகப்போகத்தான் தெரிய ஆரம்பித்தது.
இப்பேர்ப்பட்ட ஜெயராஜ்தான் கோத்தபய ராஜபக்ஷேவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் கே.பி.யிடம் பேட்டி எடுத்திருக்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இந்த பேட்டி முற்றிலுமான சிங்களத் தந்திரத்தின் வெளிப்பாடு என்பது?'' என நம்மைக் கேட்ட அவர்கள், இந்த பேட்டியின் பின்னணி பற்றியும் பேசினார்கள்.
''புலிகள் இயக்கம் 2009-ல் சிங்களத் தந்திரத்தால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டதும், பிரபாகரன் இருக்கிறார் என்றும் வீரமரணம் அடைந்துவிட்டார் என்றும் மூன்று நாட்களுக்குள் முழுதாக புரண்டு பேசியவர்தான் கே.பி. அப்போதே இவர் சிங்கள-இந்திய உளவுத் துறைகளின் பிடியில் சிக்கிவிட்டாரோ என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் அதன்பின் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற குரல்கள் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டபோது அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார் கே.பி. மலேசியாவில் சிங்களப் புலனாய்வுத் துறையினரால் கே.பி. கைது செய்யப்பட்டபோது, 'இது புலிகளின் ராஜதந்திர நகர்வுகளாக இருக்கலாம்' என்றும் புலம்பெயர் தமிழர்கள் கருதினர்.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக கே.பி.யின் சாயம் வெளுக்கத் தொடங்கியது.
புலிகளின் பெருமதியான நிதி பற்றிய தகவல்கள் கே.பி.வசம் இருந்ததால் அவரை தனது விருந்தாளியாக ஆக்கி அழகு பார்க்க ஆரம்பித்துவிட்டது சிங்கள அரசு. இந்த நிலையில், ஈழத்தில் உள்ள தமிழர்கள் நன்றாக இருப்பதாகவும்... அதை கே.பி. தலைமையிலான குழு பார்வையிட்டதாகவும் தகவல்கள் வந்தன. இதில் கே.பி.யோடு போனவர்களின் பேட்டிகளை வெளியிட்டு, 'கே.பி. சிங்களனின் முழு ஊழி-யனாகிவிட்டார்' என்பதை இணைய ஊடகங்கள் அம்பலப்-படுத்தின.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலம்பெயர் நாடுகளில் கிளர்ந்து எழுந்த தமிழர்களின் போராட்டத்தை சிதைக்கச் செய்வதற்காக, கே.பி.யை சிங்கள அரசு பயன்படுத்தி வருவதை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்துவிட்டனர். இதனால் கே.பி.யை அவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டனர். கே.பி.யை மையப்படுத்திய சிங்களத் தந்திரங்கள் புலம்பெயர் நாடுகளில் தவிடுபொடியான பிறகுதான் இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களை நோக்கி திரும்பியிருக்கிறது உளவுத் துறை கூட்டணி. அதுதான் கே.பி.யின் வைகோ மீதான தாக்குதல் பேட்டி'' என சொல்லி வியப்பை ஏற்படுத்தினர்.
''தமிழகத்தை நோக்கி சிங்கள உளவுத் துறை கூட்டணியா?'' என்று நாம் கேட்க,
''உச்சகட்ட போர் நடந்த காலகட்டங்களில் தமிழகத்தில் கிளர்ந்த உணர்வுகளையும், போராட்டங்களையும் தமிழக அரசு உதவியுடன் மத்திய அரசு அடக்கியது. அப்படியுமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பல காங்கிரஸ் தலைகள் உருண்டன.
விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மீண்டும் ஈழத்தை மையமாக வைத்து ஓர் எழுச்சி தமிழகத்தில் எழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது சிங்கள அரசு. அப்படி ஒரு அசமந்தமான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டுமானால், இப்போது உள்ள மாதிரி ஈழ விவகாரத்தில் 'சவசவ' போக்கைக் கையாளக் கூடிய தி.மு.க. அரசே தொடரவேண்டும் என்பதுதான் சிங்கள உளவுத் துறையின் திட்டம். இதற்காகத்தான் ஈழ எழுச்சியில் பங்கு வகித்துக் கொண்டிருக்கும் நெடுமாறன், வைகோ போன்றவர்களை இழிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆக... வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சாதகமான இதே போன்ற ஆட்சியே தொடர சிங்கள உளவுத்துறையின் சதிதான் இந்த கே.பி. பேட்டி. இது மட்டுமல்ல... அடுத்து சிங்கள உளவுத் துறையின் தாக்குதலுக்கு 'நாம் தமிழர்' ஒருங்கிணப்பாளர் சீமான் போன்றவர்களும் ஆளாகக் கூடும்'' என்று முடித்தார்கள்.
கொழும்பு தட்பவெப்பம் அறிந்த மேலும் சிலரோ, ''கே.பி. பேட்டி மூலம் மட்டுமல்ல... தமிழகத்தில் தங்களுக்கு சாதகமான ஊடகங்கள் மூலம் மேலும் சில தகவல்களையும் பரப்ப திட்டமிட்டு வருகிறது சிங்கள உளவுத்துறை. அதில் முக்கியமாக.... போர் பற்றி விசாரிக்க சிங்கள அரசால் அமைக்கப்பட்டிருக்கும் குழுவிடம் 'பிரபாகரன் மரணம் & 2' என்ற வீடியோ காட்சிகளை ஒப்படைத்திருக்கிறது கோத்தபய டீம். அதாவது பிரபாகரன் மரணத்தை மேலும் உறுதிப்படுத்துவது போன்ற சில காட்சிகள் அடங்கிய இந்த வீடியோவை சில மீடியாக்கள் மூலம் கசியவிட்டு... பிரபாகரன் இறந்துவிட்டார் என்று உறுதியாக தமிழகத்தை நம்பவைப்பதுதான் கோத்த-பயவின் அடுத்த திட்டம். அதனால் பிரபாகரன் பற்றி சிங்கள அரசின் அடுத்த சி.டி.யை விரைவிலேயே எதிர்பார்க்கலாம். அதனால் தமிழ்நாட்டு மக்கள் சிங்கள உளவுத் துறையினரிடமும் அவர்களின் திட்டத்தை இங்கே அரங்கேற்றுபவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்'' என எச்சரித்துச் சொல்கிறார்கள்.
'ஆரா
|
தமிழக அரசியல்
|
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment