Tuesday, June 1, 2010

[கனடா தமிழ் Canada Tamil] Fwd: மக்கள் தொகை கணெக்கெடுப்பில் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும்: சீமான்



---------- Forwarded message ----------
From: எல்லைத் தமிழன் <mathan.dxb@gmail.com>
Date: 2010/6/1
Subject: மக்கள் தொகை கணெக்கெடுப்பில் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும்: சீமான்
To: tamilmantram <tamilmanram@googlegroups.com>


மக்கள் தொகை கணெக்கெடுப்பில் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும்: சீமான்

மக்கள் தொகை கணெக்கெடுப்பின் பொழுது தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 45 நாட்கள் நடைபெற இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கனெக்கெடுப்பில் அனைத்து தமிழர்களும் தவறாது தங்கள் இனத்தை பதிவு செய்தல் அவசியம். இனம் என்பதில் என்ன பதிவு பண்ணுவது என்ற குழப்பம் இங்கு தமிழர்களிடையே உள்ளது.

இங்கு இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின்  நிலப்பரப்பில் வாழும் குடிமக்கள் மட்டுமே.

Click Here
இதைத்தான் இந்திய அரசியல் சட்டமும் சொல்கின்றது. அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார்.


ஆங்கிலேயன் ஒருவன் பயன்படுத்திய சொல் எப்படி இனமாக மாறும்? திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா?அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் திராவிடன் என்றால் இங்கு தமிழ்நாட்டில் மட்டும் தானே திராவிட என்ற சொல்லை அனைவரும் தூக்கிக்கொண்டு திரிகின்றார்கள். ஏன் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் என்று சொல்கின்றார்கள்?

ஆக தமிழ்நாட்டில் இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது மலேசியா

மலேசியாவில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், நக்கீரன் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார்.

அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும், அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள்கிழமை மலேசிய பிரதமர் அலுவலகத்துக்கு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலைகளை பேக்ஸ் மூலமாக செய்திகளாக அனுப்பினார். தொடர்ந்து மலேசிய ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.


Click Here
இதன்பிறகு மலேசிய பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, ஈழத்தமிழர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 8 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களின் உயிர்களையும் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக முன் வைத்தார்.

அதன்பிறகு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமரின் அந்தரங்கச் செயலாளரின் உத்தரவின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கலைவாணர் நக்கீரன் செய்தியாளரிடம் கூறும்போது,

மலேசியா ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, கோரிக்கையை எழுப்பி, அது ஓரளவு சரியாகும் நிலையில், ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகள், முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தவறான செய்திகளை அரசுக்கு தெரியப்படுத்தி விட்டனர்.

இதனால் ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்தது. இப்போது நாங்கள் உண்மை நிலையை மலேசியா ஆணையர் அப்துல் ரகுமானுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பேக்ஸ் மூலமாக அனுப்பி இருந்தோம். அதன்பிறகு செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 1 மணி வரை பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, உண்மை நிலையை விளக்கி கூறினோம். முதல் கட்டமாக 75 ஈழத்தமிழர்களை நாடு கடத்தும் முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து இதே மலேசியாவில் அவர்கள் இருக்கும் வரை அகதிகளுக்கான அனைத்து உதவிகளையும் கொடுத்து தங்க வைக்க வேண்டும் என்று கூறினோம். அதையும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதனிடையே நார்வே, கனடா நாட்டின் தூதர்களிடம் தொடர்பு கொண்டு 75 பேரையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் வரும் வியாழன் அன்று இதுகுறித்து முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நாளை முதல் 75 ஈழத்தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment